தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் என்ன நடக்கும்? - மாணவநண்பன்

கற்போம்.. கற்பிப்போம்..

Hot Posts

Post Top Ad

Tuesday 3 April 2018

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை’ என்பார்கள். ஆப்பிளில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான அத்தனை சத்துகளும் நிறைந்துள்ளன. ஆப்பிளில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன? அதைத் தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளைத் தெரிந்து கொள்வோம். 

வயிற்றுப் பிரச்னை தீர்க்கும்!  

ப்பிளில் நார்ச்சத்து  இருப்பதால் எளிதில் செரிமானமாகிவிடும்.  இதில் உள்ள பாலிபீனால் (Polyphenols) வயிற்றில் உண்டாகும் வாயுவை அகற்றுவதுடன் வயிறு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும். மலச்சிக்கல் போக்கும்.

எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்!

சி
வப்பு ஆப்பிளில் உள்ள குவார்செடின்’ (Quercetin) எனும் ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் சி சத்து இருப்பதால் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்.

கொழுப்பைக் குறைக்கும்! 

ப்பிளில் உள்ள எளிதில் கரையக்கூடிய ‘பெக்டின்’ (Pectin) என்னும் நார்ச்சத்து, உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும்; இதயத்தைப் பாதுகாக்கும்.   
சுவாசம் சீராகும்! 

ப்பிளில் உள்ள ஆன்டி- இன்ஃப்ளாமெட்டரி (Anti-Inflammatory) என்ற வேதிப்பொருள் ஆஸ்துமா, அலர்ஜி போன்ற சுவாசப் பிரச்னைகள்  ஏற்படாமல் தடுத்து, சீரான சுவாசத்துக்கு வழிவகுக்கும்.

நினைவாற்றலை அதிகரிக்க..!  

ந்தப் பழத்தில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் மூளையிலுள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்களின் (Neurotransmitters) உற்பத்தியை அதிகரித்து, நினைவாற்றலைத் தூண்டும். 

சருமம் பாதுகாக்கும்!

ப்பிளின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமுள்ளன. எனவே, தோலுடன் ஆப்பிளைச் சாப்பிடுவதால் அதில் உள்ள வைட்டமின் சி, கொலாஜன் (Collegen) உருவாவதை ஊக்குவித்துச் சருமத்தைப் பளபளப்பாக்கும். 

கண்பார்வைக்கு நல்லது!

ப்பிளிலிருக்கும் ஃப்ளேவனாய்டு (Flavonoid) மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் (Antioxidant) பார்வையைத் தெளிவாக்கும். கண் கோளாறுகள் வராமல் தடுக்கும். 

No comments:

Post a Comment

Post Top Ad