டான்செட் நுழைவு தேர்வு அறிவிப்பு !! மாணவர்களே... தயாராகுங்கள்... - மாணவநண்பன்

கற்போம்.. கற்பிப்போம்..

Hot Posts

Post Top Ad

Tuesday, 3 April 2018

டான்செட் நுழைவு தேர்வு அறிவிப்பு !! மாணவர்களே... தயாராகுங்கள்...

ண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் டான்செட் நுழைவுத் தேர்வு தேதி நேற்று (ஏப்ரல் 2) அறிவிக்கப்பட்டது.


                                            

தமிழக கல்லூரிகளில் எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான், எம்பிஏ, எம்சிஏ, போன்ற முதுநிலை படிப்புகளை அரசு ஒதுக்கீட்டில் படிக்க அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும், ’டான்செட்’ நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

டான்செட் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, பல்கலைக்கழக துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் மற்றும் சில நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவை முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

வரும் கல்வி ஆண்டில், முதுநிலை பட்டப் படிப்புக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் பட்டதாரிகளுக்கு, மே 19மற்றும் 20ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. ஏப்ரல் 23ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப முறை, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களைப் www.annauniv.edu/tancet2018 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 

No comments:

Post a Comment

Post Top Ad