இரண்டாம் வகுப்புவரை நோ வீட்டுப்பாடம்- என்னதான் சொல்ல வருகிறார்கள்? - மாணவநண்பன்

கற்போம்.. கற்பிப்போம்..

Hot Posts

Post Top Ad

Wednesday 22 August 2018

இரண்டாம் வகுப்புவரை நோ வீட்டுப்பாடம்- என்னதான் சொல்ல வருகிறார்கள்?


"என் பையன் யு.கே.ஜி படிக்கும் வரை ஸ்கூலில் எந்த வீட்டுப்பாடமும் கொடுத்ததில்லை. இப்போது, முதல் வகுப்பு. கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. அதனால்தான் ஒரு நாளில் அரை மணி நேரமாவது ஒரே இடத்தில் உட்கார்ந்து படிக்கிறான். இதையும் கொடுக்கக் கூடாதுன்னா, அவன் மூன்றாம் வகுப்பு போகிறப்போ, படிப்பே பெரிய சுமையா மாறிடுமோன்னு பயமா இருக்கு. 

எல்.கே.ஜி-யில் ஆரம்பிச்சு இரண்டாம் வகுப்பு வரை நான்கு வருஷம் வீட்டுப்பாடம் வழக்கமே இல்லாமல், திடீர்னு மூன்றாம் வகுப்பில் வீட்டுப்பாடம் செய்யும்போது கஷ்டமா இருக்குமே. திணறிப்போயிட மாட்டாங்களா'' எனக் கேள்விக்குறியுடன் இருக்கிறார்கள் பெற்றோர்கள்.

''வீட்டுப்பாடம் கொடுத்தால்தான், பிள்ளைகளுக்குத் தினமும் சிறிது நேரம் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் வரும். என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் ஒரு பக்கத்துக்கு எழுதும் அளவுக்குத்தான் தருவார்கள். 

வாரத்துக்கு இரண்டு நாள் மட்டும் டிக்டேஷன் வேர்ட்ஸ் மாதிரி சின்னச் சின்ன கிளாஸ் டெஸ்ட் இருக்கும். இப்போதிலிருந்தே இதையெல்லாம் பழக்கினால்தான், மூன்றாம் வகுப்பில் சைக்கிள் டெஸ்ட், யூனிட் டெஸ்ட், மன்த்லி டெஸ்ட் எனச் சமாளிக்க முடியும். ஆனால், வீட்டுப்பாடம் பிள்ளைகளின் மாலை நேரங்களை முடக்கிப்போட்டுவிடக் கூடாது. 
தினமும் வீட்டுப்பாடம் ஒரு பக்கத்துக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். 

இல்லை ஏதாவது வரைபடம் சுலபமாக வரைய சொல்லலாம். இல்லை பிள்ளைகளில் விருப்பம் போல அவர்களாகவே வீட்டி பாடங்களை எழுத சொல்லலாம். சில விளையாட்டுகளையும் வீ ட்டுப்படங்களாக செய்ய சொல்லாம் என்கின்றனர் சில பெற்றோர்கள். 

இதற்க்கு தகுந்த காரணங்களையும், யோசனைகளும் தாங்கள் சொல்லலாமே..

1 comment:

Post Top Ad