ஒரு அரசுப்பள்ளி எப்பொழுது முதலிடம் வகிக்கும்? - மாணவநண்பன்

கற்போம்.. கற்பிப்போம்..

Hot Posts

Post Top Ad

Thursday, 19 April 2018

ஒரு அரசுப்பள்ளி எப்பொழுது முதலிடம் வகிக்கும்?

1 .தலைமையாசிரியர் கடமை:


பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் பாரபட்சம் காட்டாத வெளிப்படை நிர்வாகத்தை முன்னெடுத்தல் அவசியம். வரவு செலவு கணக்கு பார்க்கும் ஆசிரியருக்கு முதலிடம் backround உள்ளவர்களுக்கு ஒரு இடம். பாடம் கற்பித்தலை விட தன்னை புகழ்வோரே தனக்கு வேண்டும் என்றெல்லாம் ஒற்றை குறிக்கோள் கொண்ட பள்ளி தலைமை குழப்பங்களின்  உறைவிடமாகத்தான் இருக்கும்.

2. ஆசிரியர் இடையே பிரிவினை கருத்து வேறுபாடுகள்: 

சங்கங்கள் சாதிய வேறுபாடுகள் : எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு மாவட்ட மாநில வட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள். அனைவருக்கும் பதவிகள்.அனைவருக்கும் பெரிய பின்புலங்கள்.  ஆசிரியர் இந்த அடையாளத்தை விட வட்டம் மாவட்டம் அடையாளமே முன்னெடுப்பு. பள்ளியில் ஆசிரியர் என்ற பெருமையை விட SGT BT PGT  நீயா நானா பாகுபாடு காட்டும் பொறுப்பற்ற வாதங்கள் பள்ளியை அதாழ பாதாளத்திற்கு கொண்டு போகும்.

இதை உணர்ந்திட முடியாத மூன்று , நான்கு பட்டங்கள்     உளவியலும் கல்விப் புதுமை கோட்பாடுகளும் கல்வியில் இடர் தீர்க்கும் அறிவும்  என்ன ஆயிற்று? .. சாப்பிடும் இடைவேளை கோஷ்டிகளின் ஆலோசனை கூட்டமானால சாப்பிடுவது புரோட்டீனேயானாலும் கார்போஹைட்ரேட்டே ஆனாலும் பேச்சு விசத்தால் அதுவும் நச்சுகளாகத்தானே எதிர் பயன்களை நிலைக்கும்?.

மேல்நிலைப்பள்ளியா அங்கே நல்ல பட்டதாரி ஆசிரியர்கள் இட மாறுதல் வைப்பது உயர்நிலைப்பள்ளியா நடுநிலைப்பள்ளியா அங்கே இடைநிலை ஆசிரியர்கள் இட மாறுதல் வைப்பது இதுபோன்று நிகழ்வு நடக்குமானால் பாலூட்டி குளிப்பாட்டி சீர் செய்யும் அம்மாவை ஒதுக்கி குடும்பம் செயல்படுவது போன்றே எதிர் விளைவுகள் வந்து படுநாசம் தான். ஆணிவேரே இல்லாத உயர் மரம் காற்றில் சாய்வது போலே தான் விளைவுகள்.   

அ ஆ இ ஈ....1  2 3...எழுத வைப்பது     வாயை திறந்து எழுத்தை உச்சரிக்கச்செய்வது.   மூக்கு வாய் ஏன் கழிவு உறுப்பு துர்நாற்றம்  எத்தனை சகித்து ஓரிடத்தில் அமர்ந்து கவனிக்கச்செய்வது dropout ,long absent ஆகாத வகையில் தாயுணர்வுடன் செயல்படும் இடைநிலை ஆசிரியர்களை கலெக்டரே ஆனாலும் கூட அந்த ஆரம்ப ஆசிரியதெய்வங்களை மறக்க முடியுமா?

சம்பள வேறுபாடு ,கிரேடு ,ஏட்டறிவு இப்படி பாகுபாடு ஈகோ இவற்றிற்கு ஊற்றுக்கண்ணாகுமானால் குரு என்ற தெய்வ அடையாளம் தகுமா?  ஒழுக்கம் அமைதி சத்தியம் அகிம்சை சமத்துவம் இப்படி கற்பித்தும் வாழ்ந்து காட்டியும் வெற்றி ரகசியம் அறிவோரே இரவில்  சக பணியாளர்களை தூங்க கூட முடியாத அளவுக்கு நிம்மதியை பறித்து துரத்தும் கொடூரத்தின் அடையாளங்கள் பள்ளி முன்னேற்றத்திற்கு பயன்படுமா? 

3..பெற்றோர்கள் ,சுற்றுப்புற பள்ளி நல விரும்பிகள்: 

ஆசிரியர்களுக்கு தைரியமாக தம் புதுமைகள் வெளிப்படுத்த  ஆதாரமே இவர்கள். ஆட்சி மாறினால் ஆட்கள் மாறுவது .இதனால் நன்மக்களின் உறவுகளுக்கும் பள்ளிக்கும் கூட அடிக்கடி நிச்சயதார்த்தம் .திருமண வைபோகம். விவாகரத்து... பள்ளி பால் அக்கறை கொண்டவர்களுக்கே செக் வைக்கும் ஜனநாயகம்.   

அன்புள்ளம் கொண்ட சான்றோர்கள் குறைந்து புத்தியை தீட்டுவது ச்சீ ...கத்தியை தீட்டு என்று அசரீரியாக ஒலிப்பது போல் நாடெங்கும். ஏதோ ஒரு தொற்று நோய் கிருமிகளின் கூட்டமோ ??? விழித்து வெல்வோம். அரசுப்பள்ளி வீழ்ந்தால் அரசுக்கும் வாழ்விடத்துக்கும் ஊருக்குமாக பெரிய தடுப்பு சுவர் போல் ... அந்நியராவோம் என்று பொதுமக்கள் விழிப்படைய வேண்டும். நாம் படித்து வளர்ந்த நம் கோவில் நம் முன்னரே இழுத்து மூடும் நிலை நோக்கியா.  ..விடேன் என எழும் மக்கள் கூட்டம்... மறுபுறம் அரசுப்பணி சம்பளம் சமுதாய அடையாளம் அரசுப்பள்ளிகள் மூடப்பட்டால் புது பணியிடங்கள் ,புது வேலைவாய்ப்புகள்  இழப்பு நிகழ்வதா நாட்டின் முன்னேற்றம்.?  தனியார் பள்ளிகள் கட்டணங்கள் இவையெல்லாம் சாமானியனை பாதிக்கவே இல்லை.

நடுத்தர வர்க்கத்திற்கே பேரிடி.ஏன்? ஆசிரியர் சமுதாயம் நடுத்தர வர்க்கம் தானே ? அரசுப்பள்ளி கற்பித்தலில் வாய்பாடு ஒப்புவித்தல் இல்லை. நீதி போதனை இல்லை.வீட்டுப்பாடம் இல்லை. ஆசிரியர் அடிக்ககூடாது. திட்டக்கூடாது. காலை வணக்கம் கூட ஆசிரியர் மாணவனை பார்த்து சொல்ல நேரிடுமோ என்னவோ? தனியார் பள்ளிகளில் இன்னும் கூட எதிர்மறை தான் என்பதாய் நாளேட்டுச்செய்திகள். கல்வி சமத்துவம் என்ற ஒற்றை நோக்கம் இந்தியாவில் காணாத உலக அதிசயம்  ஒரே ஆண்டில் ஆயிரமாயிரம் CBSE பள்ளிகள். மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு போராட்டம்  பெருந்தலைவர் கர்ம வீரரே தோற்கடிக்கப்பட்ட  மக்கள் போராட்டம் 50 ஆண்டுக்குள் தலைகீழோ  CBSEபள்ளிகளில் மக்கள் கூட்டம்... எப்படியோ சாத்தியமாகும் கால மாற்றம்...

காலச்சக்கரத்தில் நம் அரசுப்பள்ளிகள் சிக்காத அளவுக்கு மாற்றம் அதுவும் நம்மிடத்தில் இருந்தே என உறுதியேற்போம். தனியார் பள்ளிகள் வசதிப்படைத்தோர்க்கு இருக்கட்டும்.நடுத்தர ,ஏழை ,விவசாய பெருங்குடிகளுக்கு அரசுப்பள்ளி என்ற அட்சய பாத்திரம் நிரந்தரமாகிட சுய பரிசோதனைகளும் அரசுப்பள்ளிஆசிரியர்களிடம்  பசிபிக் பேராளி அலைகளாய் தொடர் வேண்டும்.

நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

Post Top Ad