சார்ட்டர்ட் அக்கவுண்டன்சி (சி.ஏ.,) படிப்பு பெண்களுக்கு உகந்த துறைதானா? - மாணவநண்பன்

கற்போம்.. கற்பிப்போம்..

Hot Posts

Post Top Ad

Wednesday, 4 April 2018

சார்ட்டர்ட் அக்கவுண்டன்சி (சி.ஏ.,) படிப்பு பெண்களுக்கு உகந்த துறைதானா?

கார்ப்பரேட் துறையின் அபார வளர்ச்சியால் சி.ஏ., படிக்க வேண்டும் என விரும்புபவர்கள் இன்று பெருகி வருகிறார்கள். எந்த நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு சி.ஏ., தகுதி பெற்றவர் சிறப்பான பணியிலிருப்பதையும் நல்ல சம்பளம் பெறுவதையும் காணலாம். அக்கவுண்டிங் மற்றும் நிதி தொடர்பான சிறப்புப் பணிகளை இவர்கள் மேற்கொள்கிறார்கள்.

நிதி மேலாண்மை, ஆடிட்டிங் போன்ற தொடர்புப் பணிகளும் இவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியாவில் பதிவு செய்து கொண்டுள்ள சி.ஏ.,க்கள் மட்டும் தான் சார்ட்டர்ட் அக்கவுண்டன்டுகளாக பயிற்சி செய்ய முடியும். இவர்கள் தான் ஒரு நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்யவும் முடியும்.

சி.ஏ., பணித் தன்மை
பொதுவாக தனிப் பயிற்சியாக இவர்கள் பணி புரிகிறார்கள். சி.ஏ.,க்களோடு தொடர்புடைய சில பணிகள் இவை தான். பைனான்சியல் அக்கவுண்டிங்: ஒரு நிறுவனத்தின் நிதி தொடர்பான ஆவணங்களை பராமரிப்பதானது மிக முக்கியமான பணி என்பதை அறிவோம். ஆபரேடிங் அக்கவுண்ட், இன்டர்பிரடிங், சூப்பர்வைசிங், கன்ட்ரோலிங் அண்ட் ஆர்கனைசிங் இன்கம் அண்ட் எக்ஸ்பென்டிச்சர், இன்டர்னல் ஆடிட், சம்பளம், இன்வாய்ஸ், வரிகள் போன்ற எண்ணற்ற பணிகள் இந்தப் பிரிவில் உள்ளன.

ஆடிட்டிங்: சி.ஏ.,க்களின் மிக முக்கிய பணி ஆடிட்டிங் எனப்படும் தணிக்கை தான். கணக்குகளை பரிசீலிப்பது மற்றும் ஆய்வு செய்வதை இது குறிக்கிறது. தங்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களின் கணக்குகளை இது போல ஆடிட் செய்யும் சி.ஏ.,க்கள் தங்களது நிறுவனங்களின் வாடிக்கையாளர் கணக்குகளையும் ஆடிட் செய்கிறார்கள். ஆடிட்டிங்கை கட்டாய ஆடிட்(ஸ்டாச்சுட்டரி), இன்டர்னல் ஆடிட், கம்பல்சரி டாக்ஸ் ஆடிட் மற்றும் சர்டிபிகேசன் அண்ட் ஆடிட் என 4 வகையாகப் பிரிக்கிறார்கள்.

காஸ்ட் ஆடிட்டிங்: ஒரு குறிப்பிட்ட வேலை அல்லது செயலின் செலவுகளை தணிக்கை செய்வது காஸ்ட் ஆடிட்டிங் எனப்படுகிறது. இதனால் செலவு கட்டுப்படுத்தப்படுவதுடன் எதிர்காலத்துக்கான நிதி அளவையும் திட்டமிட முடிகிறது.

தேவையான குணாதிசயங்கள்: எந்த நிறுவனத்திலும் சி.ஏ.,க்கள் முக்கியமான பொறுப்பிலும் பணியிலும் இருப்பதால், அவர்கள் நேர்மையானவர்களாகவும் திட்டமிட்டு செயல்படுபவர்களாகவும் இருப்பது மிக அவசியம். தங்களது துறையில் மிகச் சிறந்த புலமையைப் பெற்றிருப்பதும் திறனுடையவர்களாக இருப்பதும் முக்கியம். இவற்றோடு ஆங்கிலத்தில் சிறப்பான தகவல் தொடர்புத் திறனும் பெற்றிருப்பவர்கள் அளப்பரிய புகழ் பெறுவது உறுதி.

தேர்வுகள்: முன்பு போல அல்லாமல் சி.ஏ.,வில் சேர விரும்புபவர்கள் 10ம் வகுப்புக்குப் பின் காமன் புரபிசியன்சி டெஸ்ட் (சி.பி.டி.) எனப்படும் பொதுத் திறனறியும் தேர்வுக்காக தங்களது பெயரை இன்ஸ்டிடியூட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தத் தேர்வை பிளஸ் 2வுக்குப் பின்தான் எழுத
முடியும். ஆனால் முன்னதாகவே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து கொண்டு 60 நாட்களுக்குப் பின்தான் சி.பி.டி.,யை எழுத முடியும். இதில் தகுதி பெறுபவர் முதல் கட்டப் படிப்பான பி.சி.சி.,யில் சேரலாம்.

புரபசனல் கம்பீடன்ஸ் கோர்ஸ் எனப்படும் இந்தப் படிப்பு முந்தைய தொடக்க நிலைப் படிப்புக்குச் சமமனாது. இதே நேரத்தில் கட்டாயமான 100 மணி நேர இன்பர்மேசன் டெக்னாலஜி படிப்புக்கும் பதிவு செய்து கொள்ள வேண்டும். அது போலவே ஒரு பதிவு பெற்ற சார்ட்டர்ட் அக்கவுண்டன்டிடம் நடைமுறை பயிற்சிக்காகவும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

3 மாத ஆர்ட்டிகிள்சிப்புக்குப் பின் 100 மணி நேர ஐ.டி., பயிற்சியை முடிக்க வேண்டும். பின்பு மொத்தமாக 15 மாத நடைமுறை பயிற்சிக்குப் பின் பி.சி.ஈ., எனப்படும் புரபசனல் கம்பீடன்ஸ் எக்ஸாம் என்னும் தேர்வை எழுத முடியும். இதை முடித்தபின் மூன்றரை ஆண்டு நடைமுறைப் பயிற்சி மற்றும் பொது மேலாண்மை மற்றும் தகவல் தொடர்புத் திறன் படிப்பையும் முடிக்க வேண்டும்.பின்பு இறுதித் தேர்வில் கலந்து கொள்ளலாம். இதன் பின்பே ஒருவர் சி.ஏ., எனப்படும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்டாக பதிவு செய்து கொள்ளலாம்.

இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கேற்ற துறை என இதைக் கூறலாம். திறன் மிக்க சி.ஏ.,க்களாக உருவாகி வரும் பெண்கள் தங்களது தொழிலை மேம்பட அமைத்துக் கொள்கின்றனர். இன்ஜினியர்களாகவும் டாக்டர் களாகவும் பெண்கள் உருவாகி மிளிரும் இன்றைய கால கட்டத்தில் தற்போது அதிக எண்ணிக்கையில் சி.ஏ.,க்களாகவும் உருவாக விரும்புகின்றனர். இதற்கான நம்பிக்கை அவர்களிடம் இருப்பதை மகிழ்ச்சியுடன் ஆமோதிக்கின்றனர் தற்போது இத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் பெண் ஆடிட்டர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad