பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கான, அகில இந்திய தரவரிசை பட்டியலில், அண்ணா பல்கலை, 10வது இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளது.
மத்திய அரசு சார்பில், 2016 முதல், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல், டில்லியில் நேற்று வெளியிடப்பட்டது. அதில், தேசிய அளவில் முதலிடத்தை, பெங்களூரில் உள்ள, இந்திய தேசிய அறிவியல் கல்வி நிறுவனம் பிடித்துள்ளது. சென்னை, ஐ.ஐ.டி., இரண்டாம் இடத்தையும், மும்பை, ஐ.ஐ.டி., மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான, அரசு பல்கலையான, அண்ணா பல்கலை, தேசிய அளவில், 10ம் இடம் பெற்று, சாதித்துள்ளது. கோவை அம்ரிதா பல்கலை, 15; பாரதியார் பல்கலை, 20; வி.ஐ.டி., - 24; சென்னை பல்கலை, 29 மற்றும் திருச்சி, என்.ஐ.டி., நிறுவனம், 31ம் இடத்தையும் பிடித்துள்ளன.
பாரத் கல்வி நிறுவனம், 35; தமிழ்நாடு வேளாண் பல்கலை, 40; காரைக்குடி அழகப்பா பல்கலை, 43; சாஸ்த்ரா கல்வி நிறுவனம், 54; ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரி, 62ம் இடங்களை பெற்றுள்ளன. எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம், 63; கோவை, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, 64; சத்யபாமா கல்வி நிறுவனம், 68; சவிதா கல்வி நிறுவனம், 70ம் இடங்களை பெற்றுள்ளன.
சென்னை, எஸ்.எஸ்.என்., இன்ஜினியரிங் கல்லுாரி, 73; கோவை, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்வி நிறுவனம், 75; மதுரை காமராஜர் பல்கலை, 81; தமிழ்நாடு கால்நடை பல்கலை, 92ம் இடங்களை பெற்றுள்ளன. திருச்சி பாரதிதாசன் பல்கலை, 94; மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லுாரி, 95 மற்றும் புதுச்சேரி, மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி, 97ம் இடத்தை பெற்று, முதல், 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
பல்கலை அளவிலும் மகுடம்:
பல்கலை அளவிலான தேசிய தரவரிசை பட்டியலிலும், பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனமே, முதலிடம் பெற்றுள்ளது. டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை, 2; வாரணாசி பனாரஸ் பல்கலை, 3; சென்னை அண்ணா பல்கலை, 4ம் இடம் பிடித்துள்ளன. கோவை அம்ரிதா பல்கலை, 8; பாரதியார் பல்கலை, 13; வி.ஐ.டி., 16; சென்னை பல்கலை, 18; பாரத் கல்வி நிறுவனம், 21; சாஸ்த்ரா, 36, ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரி, 40ம் இடங்களை பெற்றுள்ளன.
சென்னை, ஐ.ஐ.டி., அசத்தல்:
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய தரவரிசை பட்டியல், நேற்று வெளியானது. இதில், இன்ஜி., கல்லுாரிகள் பிரிவில், சென்னை ஐ.ஐ.டி., மூன்றாவது ஆண்டாக, தொடர்ந்து முதல் இடம் பெற்று சாதித்துள்ளது. அண்ணா பல்கலை, 8; திருச்சி, என்.ஐ.டி., 11; வி.ஐ.டி., 16; பிட்ஸ் பிலானி பல்கலை, 17ம் இடங்களை பெற்றுள்ளன.
கல்லுாரிகள் பிரிவில், திருச்சி பிஷப் ஹீபர், 3; சென்னை மாநில கல்லுாரி, 5; லயோலா கல்லுாரி, 6; சென்னை, எம்.சி.சி. கல்லுாரி, 10; கோவை, பி.எஸ்.ஜி., 11; சென்னை கிறிஸ்தவ மகளிர் கல்லுாரி, 22ம் இடங்களை பெற்றன
மேலாண்மை, எம்.பி.ஏ., கல்லுாரிகள் பட்டியலில், திருச்சி, என்.ஐ.டி., 15; சென்னை கிரேட் லேக்ஸ் மேலாண் கல்வி நிறுவனம், 16; அண்ணா பல்கலை, 28; வி.ஐ.டி., 29; லயோலா கல்லுாரி, 32ம் இடங்களை பிடித்துள்ளன
மருந்தியல் பிரிவில், நீலகிரி, ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி, 15; அண்ணாமலை பல்கலை, 20, ராமச்சந்திரா கல்வி நிறுவனம், 21ம் இடங்களை பெற்றுள்ளன
மருத்துவ கல்வி பிரிவில், வேலுார் கிறிஸ்தவ கல்லுாரி, தேசிய அளவில், 3ம் இடம் பெற்றுள்ளது. புதுச்சேரி, ஜிப்மர், 6ம் இடம்; சென்னை ராமச்சந்திரா கல்லுாரி, 10; கோவை, பி.எஸ்.ஜி., 21; எஸ்.ஆர்.எம்., 22ம் இடத்தை பெற்றுள்ளன.
கட்டடவியல் கல்லுாரிகள் பிரிவில், அண்ணா பல்கலை, 6ம் இடம் பெற்றுள்ளது. வேளாண் பிரிவில், தமிழக கல்வி நிறுவனங்கள் எதுவும் இடம் பெறவில்லை.
No comments:
Post a Comment