‘டாம் ஸ்விஃப்டி’ என்று கேள்விப்பட்டுள்ளீர்களா? - மாணவநண்பன்

கற்போம்.. கற்பிப்போம்..

Hot Posts

Post Top Ad

Friday, 16 March 2018

‘டாம் ஸ்விஃப்டி’ என்று கேள்விப்பட்டுள்ளீர்களா?


‘டாம் ஸ்விஃப்டி’ என்று கேள்விப்பட்டுள்ளீர்களா? ஒருவிதமான வார்த்தை விளையாட்டு இது.
எட்வர்டு ஸ்ட்ரேட்மேயர் என்பவர், சிறுவர்களுக்காக மர்மக் கதைகள் அடங்கிய ‘டாம் ஸ்விஃப்ட்’ என்னும் புத்தகத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அந்தப் பெயரிலிருந்து வந்ததுதான் இந்தச் சொல்.

ஒரு வாக்கியத்தில் உள்ள பெயருக்குப் பொருத்தமாக Adverb எனப்படும் வினையடை அல்லது வினையுரிச் சொல்லைப் போட்டு அந்த வாக்கியத்தை முடிக்கும் ஒரு ஜாலியான எழுத்து விளையாட்டு இது.

உதாரணம்: “I am waiting to see the doctor,” said Tom patiently. இந்த வாக்கியத்தில் patiently என்பதற்கு, ‘பொறுமையாக’ என்று ஓர் அர்த்தம் இருந்தாலும், டாக்டர்-பேஷன்ட் என்கிற பொருத்தத்தையும் இங்கே ரசிக்கலாம்.

தமிழிலும் இப்படியான ‘டாம் ஸ்விஃப்டி’ வேடிக்கை வாக்கியங்களை எழுத முடியும்.

1) நிதியமைச்சர் தமது உரையை ஒரு ‘வரி’ விடாமல் படித்தார்.

2) பாட்டாவின் செருப்பு வியாபாரம் நன்றாக ‘நடக்கிறது’.

3) அந்தக் கசாப்புக் கடைக்காரன் பார்ப்பதற்கு ‘எலும்பும்தோலுமாக’ இருந்தான்.

4) தான் ஒரு பிரபல டாக்டர் என்கிற கர்வம் அவரிடம் ‘மருந்துக்குக்கூட’ இல்லை.

5) அந்தச் சலவைக்கடைக்காரர், தேர்வில் மதிப்பெண் குறைந்ததற்காகத் தன் மகனை‘வெளுத்து வாங்கினார்’.

6) அவர் எப்போதுமே அந்த நாதஸ்வரக் கலைஞரின் பேச்சுக்குதான் ‘ஒத்து ஊதுவார்’.

7) ‘குடும்பம் இருக்கிற நிலைமையில், தீபாவளிக்குப் பட்டாசெல்லாம் வாங்கித் தர முடியாது’ என்று வெடித்தான் குமார்.


No comments:

Post a Comment

Post Top Ad