இந்த தொடர் இந்திய விடுதலைப் போர் வீரர்கள் பற்றியது. இதில் உள்ள தகவல்கள் தமிழக அரசின் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும். தினம் ஒருவரைப் பற்றி இந்த தொடரில் சுருக்கமாக காணலாம்.
நாள் ஒன்று:
பூலித்தேவன்(1 செப்டம்பர் 1715 - 1767)
இந்தியா உருவாவதற்கு முன்பே, இந்த மண்ணை மீட்கப் போராடிய தமிழர்களின் விவேகம், தமிழர்களின் போர்த் தந்திரம், வீரம் போன்றவற்றைக் கேட்டால் பூனைகூடப் புலியாக மாறிவிடும். அந்த அளவு வீரம் செறிந்தது.
அன்றைய காலகட்டத்தில், மாவீரன் பூலித்தேவன் மீது படை எடுப்பதற்காக, வெள்ளையர்கள் தென்மலை என்ற இடத்தில் முகாமிட்டிருந்தனர்.
மாவீரன் பூலித்தேவனின் படை வீரர்கள் சண்டையிட வரும்போது, அவர்கள்மீது பீரங்கியால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு, அவற்றில் வெடிமருந்தும் நிரப்பி வைத்திருந்தனர்.இதனால், வெள்ளையர்களை அவர்களது பீரங்கியையே வைத்துக் கதையை முடித்துவிட வேண்டும் என யோசித்து, அந்தத் தீரமிகு செயலைச்செய்ய ஒண்டிவீரன்தான் சரியானவன் என்று முடிவுசெய்து, ஒண்டிவீரனை அனுப்பிவைத்தார் பூலித்தேவன்.
ஒண்டிவீரன் பீரங்கிகளின் வாயை அடைத்து எதிர்புற மாகவெடிக்கும்படி செய்துவிட்டு, வெற்றி ஒலி எழுப்பிவிட்டுக் குதிரையிலேறிப் பறந்தார்.
எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வெள்ளை வீரர்கள். அப்போது, பீரங்கிக்குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடித்துச் சிதறியதைக் கண்டு பதைபதைத்து, அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டது ஆங்கிலேயப் படை. இதில், வெள்ளையர் முகாம் மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான வீரர்கள் செத்து மடிந்தனர்.
இந்த மண் தமிழனுக்குத்தான் சொந்தம் என எதிரிகளை விரட்டிவிரட்டி அடித்த பூலித்தேவன், கி.பி 1767-ல் மறைந்தார்.
No comments:
Post a Comment