கூகுள் மேப்ஸ்-ன் புதிய அப்டேட்ஸ்தான் என்ன? - மாணவநண்பன்

கற்போம்.. கற்பிப்போம்..

Hot Posts

Post Top Ad

Wednesday, 14 March 2018

கூகுள் மேப்ஸ்-ன் புதிய அப்டேட்ஸ்தான் என்ன?

இந்தியாவில் கூகுள் மேப்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சங்கள் குறிப்பிட்ட லொகேஷனை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ள வழி செய்வதோடு வேகமாகவும் செய்ய உதவுகிறது. மேப்ஸ் செயலியில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி முன்பை விட கூடுதல் மொழிகளில் செயலிகளை இயக்கும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.
பிளஸ் கோடுகள்:

கூகுள் மேப்ஸ் செயலியில் பிளஸ் கோடுகள் இந்தியா தவிர மற்ற நாடுகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த அம்சம் இந்தியவிலும் வழங்கப்பட்டுள்ளது.

ஆல்ஃபா நியூமெரிக் கோடுகளின் முதல் நான்கு இலக்க எண்கள் பகுதியை குறிக்கும் என கூகுள் தெரிவித்து இருக்கிறது. இதனுடன் கூடுதல் எண்களை பதிவிடும் போது குறிப்பிட்ட பகுதியின் சரியான இடத்தை சூம் செய்யும். பிளஸ் கோடுகளை மேப்ஸ் செயலியில் இருந்தபடியே உருவாக்கி அதனை அனைத்து வகையான குறுந்தகவல் சேவை மூலமாகவும் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். 

மேலும் பிளஸ் கோடுகளை கூகுள் சர்ச் பாரிலும் பேஸ்ட் செய்ய முடியும். இவ்வாறு செய்ததும் குறிப்பிட்ட இடம், கூகுள் மேப்ஸ் சேவையில் தானாக திறக்கும்.

முகவரி சேர்க்கலாம்:

கூகுள் மேப்ஸ்-இல் இதுவரை சேர்க்கப்படாத முகவரியை சேர்க்கும் சேவையை இந்த வசதி வழங்குகிறது. இந்த அம்சம் கொண்டு குறிப்பிட்ட இடத்தில் பின் வைத்து அதனை மற்றவர்கள் பார்க்கும் படி செய்ய முடியும். இந்த அம்சத்துடன் வெரிஃபிகேஷன் ஃபில்ட்டர் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

ஸ்மார்ட் அட்ரெஸ்:

ஸ்மார்ட் அட்ரெஸ் அம்சம் செயற்கை நுண்ணறிவு கொண்டு வாடிக்கையாளர்கள் தேடும் இடத்தின் அருகாமையில் இருக்கும் புகழ் பெற்ற அல்லது அனைவருக்கும் தெரிந்த இடங்களை காண்பிக்கும். இதை கொண்டு வாடிக்கையாளர்கள் தேடும் குறிப்பிட்ட இடத்தின் அருகாமையில் சென்றிட முடியும்.

கூடுதல் மொழிகள்:

கூகுள் மேப்ஸ் செயலியில் ஆறு இந்திய மொழிகளுக்கான சப்போர்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் வாய்ஸ் நேவிகேஷன் வசதியை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, பெங்காலி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் தேட முடியும். முன்னதாக இந்தியாவில் கூகுள் மேப்ஸ் சேவையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளுக்கான சப்போர்ட் வழங்கப்பட்டு இருந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad