பொதுத்தேர்வு எழுதும் அறையில் .... - மாணவநண்பன்

கற்போம்.. கற்பிப்போம்..

Hot Posts

Post Top Ad

Saturday, 3 March 2018

பொதுத்தேர்வு எழுதும் அறையில் ....

தேர்வு எழுதும் அறையின் வெளியிலேயே, தேர்வு எழுதுபவர்களின் நுழைவுச் சீட்டினைச் சரிபார்த்து உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அனுமதிக்கும்போது, காலணி, பெல்ட், செல்போன் ஆகியவற்றை வெளியில் வைத்துவிட்டு, அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வேண்டும். வருகை புரியாதவர்களின் இருக்கையைக் காலியிடமாகவிட வேண்டும். 

தேர்வு எழுத உள்ளவரின் புகைப்படம், பெயர், தேர்வுப் பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்கள் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ளவும். தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள பக்க எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல் பக்கங்கள் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். 

தேர்வு எழுதும் இடத்திலும் நாற்காலிக்கு அருகிலும் எந்தவிதமான துண்டுச்சீட்டுகள் இல்லை என்பதைத் தேர்வு அறைக்குள் நுழைந்தவுடன் உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

தேர்வு எழுதுபவர்கள் விடைத்தாளின் எந்தப் பகுதியிலும் தனது பெயரையோ, தேர்வு எண்ணையோ எழுதக் கூடாது. கணிதக்கேள்விகள் கேட்கப்படும்போது, அதை விடைதேடும் வகையில் பயிற்சி செய்வதாக இருந்தால் விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். 

கூடுதல் விடைத்தாள்கள் தேவைப்படுகிறது என்ற விவரத்தைக் கடைசி இரண்டு பக்கங்களை எழுதும்போதே தேர்வு அறைக்கண்காணிப் பாளரிடம் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் காலவிரயம் தவிர்க்கப்படும். 

ஐந்து வினாக்களுக்குப் பதிலளியுங்கள் என்று அறிவுறுத்தும்போது ஆறு கேள்விகளுக்குப் பதிலளித்து ஒரு கேள்விக்கான பதிலை ஓவர் சாய்ஸில் எழுதி, பின்னர் விடைகளைக் கோடிட்டு அடிக்கும்போது, ‘மேற்கண்ட விடை என்னால் அடிக்கப்பட்டது’ என்ற குறிப்புரையை பேனாவினால் எழுத வேண்டும். 

தேர்வு எழுதுபவர்கள், விடைத்தாளில் எழுதிய அனைத்து விடைகளையோ சில விடைகளையோ அடித்துவிடுவதை ஒழுங்கீனச் செயலாகக் கருதுகிறது தேர்வுத்துறை. விடைகளை அடித்துவிடும்போது, தேர்வு முடிவு அறிவிக்கப்படுவதில் இருந்து நிறுத்தம் செய்யவும், அடுத்து வரும் இருபருவங்களுக்குத் தேர்வினை எழுத அனுமதிக்க இயலாது எனத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே, எக்காரணங்கொண்டும் எழுதிய விடைகளை அடித்துவிடுவதைத் தவிர்க்க வேண்டும். விடைத்தாளில், விடைகள் எழுதாத பக்கங்கள் இருந்தால், அதைக் குறுக்கே கோடிட வேண்டும். 

தேர்வறையின் வெளியிலேயே, தேர்வு எழுதுபவர்களின் நுழைவுச் சீட்டினைச் சரிபார்த்து உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அனுமதிக்கும்போது, காலணி, பெல்ட், செல்போன் ஆகியவற்றை வெளியில் வைத்துவிட்டு, அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வேண்டும். வருகை புரியாதவர்களின் இருக்கையைக் காலியிடமாகவிட வேண்டும். 

தேர்வு எழுத உள்ளவரின் புகைப்படம், பெயர், தேர்வுப் பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்கள் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ளவும். தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள பக்க எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல் பக்கங்கள் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். 

தேர்வு எழுதும் இடத்திலும் நாற்காலிக்கு அருகிலும் எந்தவிதமான துண்டுச்சீட்டுகள் இல்லை என்பதைத் தேர்வு அறைக்குள் நுழைந்தவுடன் உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

தேர்வு எழுதுபவர்கள் விடைத்தாளின் எந்தப் பகுதியிலும் தனது பெயரையோ, தேர்வு எண்ணையோ எழுதக் கூடாது. கணிதக்கேள்விகள் கேட்கப்படும்போது, அதை விடைதேடும் வகையில் பயிற்சி செய்வதாக இருந்தால் விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். 

கூடுதல் விடைத்தாள்கள் தேவைப்படுகிறது என்ற விவரத்தைக் கடைசி இரண்டு பக்கங்களை எழுதும்போதே தேர்வு அறைக்கண்காணிப் பாளரிடம் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் காலவிரயம் தவிர்க்கப்படும். 

ஐந்து வினாக்களுக்குப் பதிலளியுங்கள் என்று அறிவுறுத்தும்போது ஆறு கேள்விகளுக்குப் பதிலளித்து ஒரு கேள்விக்கான பதிலை ஓவர் சாய்ஸில் எழுதி, பின்னர் விடைகளைக் கோடிட்டு அடிக்கும்போது, ‘மேற்கண்ட விடை என்னால் அடிக்கப்பட்டது’ என்ற குறிப்புரையை பேனாவினால் எழுத வேண்டும். 

தேர்வு எழுதுபவர்கள், விடைத்தாளில் எழுதிய அனைத்து விடைகளையோ சில விடைகளையோ அடித்துவிடுவதை ஒழுங்கீனச் செயலாகக் கருதுகிறது தேர்வுத்துறை. விடைகளை அடித்துவிடும்போது, தேர்வு முடிவு அறிவிக்கப்படுவதில் இருந்து நிறுத்தம் செய்யவும், அடுத்து வரும் இருபருவங்களுக்குத் தேர்வினை எழுத அனுமதிக்க இயலாது எனத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே, எக்காரணங்கொண்டும் எழுதிய விடைகளை அடித்துவிடுவதைத் தவிர்க்க வேண்டும். விடைத்தாளில், விடைகள் எழுதாத பக்கங்கள் இருந்தால், அதைக் குறுக்கே கோடிட வேண்டும்.

வெற்றி உங்களுக்கே....

No comments:

Post a Comment

Post Top Ad