“மாணவர்களே... தேர்வு மட்டுமே உங்கள் திறனை நிர்ணயிக்காது” - மாணவநண்பன்

கற்போம்.. கற்பிப்போம்..

Hot Posts

Post Top Ad

Wednesday 28 February 2018

“மாணவர்களே... தேர்வு மட்டுமே உங்கள் திறனை நிர்ணயிக்காது”


இன்று  எல்லோருக்கும் மாதத்தின் முதல் நாள். ஆனால், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கோ தேர்வு நாள். இதுவரையிலும் கொஞ்சம் சுமாராகவே படித்து வந்திருக்கும் மாணவர்கள் 'இன்னும் ஒரு மாதம் இருக்கே அப்போ படிச்சிக்கலாம், அதான் இன்னும் ஒரு வாரம் இருக்குல்ல அப்ப பாத்துக்கலாம், இன்னும் மூணு நாள் இருக்கு பாஸ். முட்டி மோதினாக்கூட படிச்சிட முடியுமே' என்று சொன்னவர்கள் மட்டுமல்லாமல், பதினொன்றாம் வகுப்பிலிருந்தே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காகத் தயாராகி வரும் மாணவர்கள்கூட இந்நேரம் உச்சகட்ட பரபரப்பில் இருப்பார்கள்.

அவர்களுக்கு மேல் பெற்றோர்கள். கண்களில் டெலி லென்ஸை மாட்டிக்கொண்டு ஒவ்வொரு நொடியும் பிள்ளைகளை கண்காணித்துக்கொண்டே இருப்பதுதான் அவர்கள் வேலை. 

ஆனால், “இந்தப் பரபரப்பு, தேர்வு குறித்த டென்ஷன் எல்லாம் தேவையில்லாத ஒன்று. இது வெறும் தேர்வுதான். இது மட்டுமே மாணவர்களின் வாழ்க்கையைத் தீர்மானித்துவிடுவதில்லை. மாணவர்களாகிய உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்யும் காரணிகள் தேர்வைத் தவிர இன்னும் நிறைய இருக்கின்றன. அதனால், முன்பு எப்படி ரிலாக்ஸ்டாக இருந்தீர்களோ அப்படியே இன்றும் இருங்கள். இனியும் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்” .

“இன்று நடக்கப்போகும் இந்தப் பொதுத்தேர்வு ஒன்றும் நீங்கள் எதிர்கொள்ளப்போகும் இறுதித் தேர்வு அல்ல. இது ஒரு போட்டி நிறைந்த உலகம். உங்கள் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகமா எங்கள் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகமா எனப் பள்ளிகளுக்குள் நடக்கும் போட்டி இது. நீயா? நானா? என்று மனிதனை மனிதனே விழுங்க நினைக்கும் இந்த மாய உலகில் மாணவர்களாகிய நீங்கள் ஏன் உங்கள் சுதந்திரத்தை இழந்து எந்நேரமும் பரிட்சைக்குத் தயாராக வேண்டும். 

வருடம் முழுவதும் பள்ளியில் அதைப்படி இதைப்படி என அவர்கள் பங்குக்குக் கொடுக்கும் அழுத்தத்தையும், 'நீ நல்லா படிச்சு அதிகமா ஸ்கோர் பண்ணினாதான் மெடிக்கல் போக முடியும், இன்ஜினீயரிங் எடுக்க முடியும்' என்று பெற்றோர்கள் அவர்கள் பங்குக்குக் கொடுக்கும் அழுத்தங்களையும் சுமந்ததுபோதும் கண்மணிகளே. உங்கள் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு இந்த டார்கெட்டுகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் உங்களால் எவ்வளவு இன்புட் எடுத்துக்கொள்ள முடியுமோ அதை எடுத்துக்கொண்டு அதன்மூலம் எந்த அளவிற்கு அவுட்புட் கொடுக்க முடியுமோ அதைக் கொடுங்கள். 

இந்தப் பரிட்சைதான் என் வாழ்க்கையே. இதை நான் பெஸ்ட்டா பண்ணலேன்னா என் வாழ்க்கையே முடிஞ்சுப்போச்சுன்னு மட்டும் நினைச்சுடாதீங்க. ஒருவேளை உங்கள் பெற்றோர்கள் படி படி என்று தொந்தரவு செய்தால் நீங்கள் முருகனாக அவதாரம் எடுத்துவிடுங்கள். 

ஆம், முருகன் தன் தந்தைக்கு ஞானத்தை உபதேசித்ததுபோல நீங்களும் உங்கள் பெற்றோரை அமர வைத்து உபதேசம் செய்ய வேண்டும். அவர்களைப் பொறுத்தவரையிலும் வருடத்தின் 365 நாள்களும் தொடர்ந்து படிக்க வாய்ப்பிருக்குமானால் அதையும் உங்களைச் செய்யச் சொல்லுவார்கள். 

அதனால், அவர்களுக்குப் புரியும்படி இந்தத் தேர்வு மட்டுமே உங்கள் திறனை நிர்ணயித்துவிடாது என்பதை எடுத்துச் சொல்லுங்கள். அதற்கு நீங்கள் ரிலாக்ஸாக இருக்க வேண்டும். இன்று மட்டுமல்ல, இனி என்றைக்கும்” என்றவரிடம் பெற்றோர்கள் எப்படி தங்கள் பிள்ளைகளைத் தயார் செய்ய வேண்டும் என்று கேட்டதும், அவர்கள் எதையுமே செய்யத் தேவையில்லை. 

பிள்ளைகளுக்குத் தெரியும் தங்களை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும் என்று. முடிந்தால் தேர்வு முடிந்து வீட்டிற்கு வரும் பிள்ளையிடம் எத்தனை மார்க் வரும்? அந்த பாயின்ட்ட சரியா எழுதிட்டியா? இந்தக் கேள்வியை விட்டுடலயே? எப்படியும் 99 மார்க் வந்துடுமா? என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யாமல் இருங்கள். அதுவே போதும்” .
 
கட்டுரை கல்வியாளர் வசந்தி தேவி

No comments:

Post a Comment

Post Top Ad